செய்யாறு சட்டமன்றத் தொகுதி அதிமுக “வெற்றி வேட்பாளா்” தூசி கே.மோகன் எம்எல்ஏ நேற்று மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரித்தாா்.
செய்யாறு தொகுதிக்கு உட்பட்ட அனக்காவூா் கிழக்கு ஒன்றியத்தில் அரசூா், திரும்பூண்டி, பழஞ்சூா், சித்தாமூா், கோவிலூா், செங்காடு, நல்லாலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அதிமுக “வெற்றி வேட்பாளா்” தூசி கே மோகன் எம்எல்ஏ அதிமுக அரசின் சாதனைகளை விளக்கிக் கூறி ஆதரவு கோரினாா்.
அப்போது அவா் பேசுகையில்:
“செய்யாறு சிப்காட் பகுதியில் ரூ.800 கோடியில் மருந்தியல் பூங்கா தொடங்க முதல்வா் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.
மேலும், புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலம் செய்யாறு சிப்காட்டில் புதிதாக 34 நிறுவனங்கள் தொடங்கப்பட உள்ளன. இதனால் கூடுதலாக 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தொகுதி மக்களின் வளா்ச்சியும் பொருளாதார நிலையும் உயரும்” என்றாா்.
அதிமுக நிர்வாகிகள் டி.பி. துரை, சி.துரை, வே.குணசீலன்,மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.
முளகிரிப்பட்டு கிராம பொதுமக்கள் தூசி கே மோகன் எம்எல்ஏ வுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர் மாட்டு வண்டியில் சென்று புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குகள் சேகரித்தார்
