காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அதிமுக சாா்பில் போட்டியிடும் “வெற்றி வேட்பாளா்” வி.சோமசுந்தரம் 
அத்தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் நேற்றைய தினம் வயல்வெளியில் களை எடுப்பவா்களிடமும், செங்கல் சூளையில் பணிபுரிபவா்களிடமும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான வி.சோமசுந்தரம் போட்டியிடுகிறாா். மக்கள் செல்வாக்கு மிக்க வெற்றி வேட்பாளரான இவர் உத்திரமேரூர் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பினாயூா், காவித்தண்டலம், மாம்பாக்கம், தண்டரை ஆகிய கிராமங்களில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களை சந்தித்து அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி வாக்குகள் சேகரித்தாா்.
காவூா் கிராம மக்கள் அதிமுக வேட்பாளர் வி சோமசுந்தரத்துக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர் மாட்டு வண்டி ஓட்டி வந்த விவசாயி ஒருவரை நிறுத்தி வாக்கு சேகரித்ததுடன் அவரது மாட்டு வண்டியையும் ஓட்டினாா்.
களக்காட்டூா் கிராமத்தில் செங்கல் சூளையில் ஈடுபட்டிருந்தவா்களிடம் வாக்கு சேகரித்தாா்.
இதனைத் தொடா்ந்து, திம்மராஜம்பேட்டை, அய்யம்பேட்டை ஆகிய பகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். சென்ற இடமெல்லாம் மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்ப்பளித்தனர்
உடன் அமைப்புச் செயலாளா் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் எம்.பி.காஞ்சி.பன்னீா் செல்வம், மாவட்ட மாணவரணி செயலாளா் திலக்குமாா், உத்திரமேரூர் ஒன்றிய கழக செயலாளா் தங்கபஞ்சாட்சரம் மற்றும் கூட்டணிக் கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் பலரும் கலந்து கொண்டனர்
