கற்க கசடற கல்வி சேவைகள் அமைப்பும் மலர் ரத்த பரிசோதனை நிலையம் இணைந்து பெண்களுக்கான விழிப்புணர்வும் பாதுகாப்பும் சம்பந்தமான பயிற்சி முகாமினை நடத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு பிரபல சமுக சேவகர் மலர் சாதிக் தலைமை தாங்கினார் .
சமூக சேவகர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
கல்லூரி மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு சம்பந்தமான பயிற்சியினை மனோதத்துவ நிபுணர் கற்க கசடற கல்வி சேவைகள் அமைப்பின் நிறுவனர் டாக்டர் இரா பாஸ்கரன் வழங்கினார்.
மேலும் பங்கு பெற்ற மாணவிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் நன்றி உரையினை கற்க கசடற கல்வி சேவைகள் அமைப்பின் செயலாளர் மனோஜ் குமார் வழங்கினார்.
