நாகூர் தர்கா குள சுற்றுச்சுவர் சீரமைப்பு பணி.
அமைச்சர்கள் ஒ.எஸ் .மணியன், வளர்மதி தொடங்கி வைத்தனர்.
நாகப்பட்டினம்
உலக புகழ் பெற்ற நாகூர் தர்கா குளம் சுற்றுச்சுவர் சமீபத்திய புயல் மழைக் காரணமாக சேதமடைந்தது.

இதை நேரில் பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி குளத்தின் சுற்றுச்சுவரை சீரமைக்க உடனடியாக ரூ.4.34 கோடி ஒதுக்கீடு செய்தார்.

இதையடுத்து சுற்றுச்சுவர் சீரமைக்கும் பணியினை இன்று காலை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன்,பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

பின்னர் தர்கா குளம் அருகே நடைப்பெற்ற சிறப்பு பாத்திஹா வில்  இருவரும் கலந்து கொண்டனர்

நாகை சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி தர்கா நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது