தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த பேரறிஞர் அண்ணாவின் 52 வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, அண்ணா பிறந்த ஊரான சின்ன காஞ்சீபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவரைத் தொடர்ந்து, மாவட்ட கழக செயலாளர் வி.சோமசுந்தரம், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலிதிருநாவுக்கரசு ஆகியோர் மாலைகள் அணிவித்து வணங்கினார்கள்.

முன்னதாக மாவட்ட கழக செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அ தி.மு.க.வினர் இருசக்கர வாகனங்கள், ஆட்டோவில் அமைதி பேரணியாக வந்து பெரு நகராட்சியில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சீ பன்னீர்செல்வம், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார், மாநில டான்சில்க் தலைவர் பூக்கடை ஆர்.டி.சேகர், மாவட்ட கழக அவைத்தலைவர் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மாணவரணி செயலாளர் திலக்குமார்,  உள்ளிட்ட  ஏராளமானோர் அண்ணா நினைவு இல்லத்தில் அண்ணா சிலைக்கு மாலைகள் அணிவித்து வணங்கினார்கள்.

பிறகு, அமைச்சர் பா.பென்ஜமின், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட கழக செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் பேரறிஞர் அண்ணாவின் அரிய புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய சட்டை, பேனா, மூக்கு கண்ணாடி, ஆகியவற்றை பார்த்து வியந்தனர்.

பிறகு, கருக்குபேட்டையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு அமைச்சர் பா.பென்ஜமின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.