செய்யாறு சட்டமன்ற தொகுதி
வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியத்தில் சித்தாலப்பாக்கம்,அரசாணிபாளையம் ,வயலாத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக சார்பில் கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
நடைபெற்றது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் கலந்து கொண்டு அதிமுக கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு சில்வர் தட்டு, இனிப்புகள் 5 கிளைக் கழகங்களுக்கு தலா ரூபாய் 5000 வீதம் 25 ஆயிரம் சட்டமன்ற உறுப்பினர் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் பி.கே.நாகப்பன் எம்.மகேந்திரன்,அரங்கநாதன்,மாவட்ட கழக துணை செயலாளர் டி.பி.துரை, மாவட்ட ஓட்டுனர் அணி செயலாளர் ரகு ,மாவட்ட கூட்டுறவு தலைவர் ரமேஷ்,செய்யாறு சர்க்கரை ஆலை தலைவர் குமரேசன்,மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் கன்னியப்பன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
செய்திகள் | NEW CHENNAI EXPRESS
செய்யாறு வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியத்தில் சித்தாலப்பாக்கம்,அரசாணிபாளையம் ,வயலாத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக சார்பில் கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தூசி கே மோகன் எம்எல்ஏ வழங்கினார்
