இந்தியாவில் மேலும் 14,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 6 லட்சத்து 39 ஆயிரத்து 684 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 17,130 போ் குணமடைந்தனா்.
இதனால், கொரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1 கோடியே 3 லட்சத்து 838 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 1 லட்சத்து 85 ஆயிரத்து 662 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 152 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 53 ஆயிரத்து 184 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா முழுவதும் 13 லட்சத்து 90 ஆயிரத்து 592 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 19 கோடியே 09 லட்சத்து 85 ஆயிரத்து 119 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 8 லட்சத்து 37 ஆயிரத்து 95 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர்.தெரிவித்துள்ளது.
