செய்யாறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
வெம்பாக்கம் மேற்கு ஒன்றியத்தில் சிறுநாவல்பட்டு, சித்தன்னகால், வட இலுப்பை, மேல்பேட்டை,கீழ் பேட்டை, செய்யனூர்,வெங்களத்தூர், உமையாள்புரம், உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக சார்பில் கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி



நடைபெற்றது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் கலந்து கொண்டு அதிமுக கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு சில்வர் தட்டு, இனிப்புகள் வழங்கினார்.
வெம்பாக்கம்ஒன்றிய குழு பெரும் தலைவர் டி .ராஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 15 கிளைக் கழகங்களுக்கு தலா ரூபாய் 5000 வீதம் சட்டமன்ற உறுப்பினர் தூசி கே மோகன் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் பி.கே.நாகப்பன் எம்.மகேந்திரன்,மற்றும் மாவட்ட கழக துணை செயலாளர் டி.பி.துரை, எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் ஜாகிர்உசேன்,மாவட்ட கூட்டுறவு தலைவர் ரமேஷ்,செய்யாறு சர்க்கரை ஆலை தலைவர் குமரேசன்,மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஜய், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் கன்னியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள் | NEW CHENNAI EXPRESS
வெம்பாக்கம் மேற்கு ஒன்றியத்தில் வட இலுப்பை, செய்யனூர்,வெங்களத்தூர், உமையாள்புரம், உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக சார்பில் கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
