தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மாவட்ட அதிமுக செயலாளர் வி சோமசுந்தரம் தலைமையில் ஏற்பாடுகள் தீவிரம்
நாளை (20 ம் தேதி) காலை சென்னையில் இருந்து கார் மூலம் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி ஸ்ரீபெரும்புதூருக்கு வருகிறார்.
அங்கு பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோவிலுக்கு சென்று, ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீராமானுஜர், ஆகியோரை தரிசிக்க உள்ளார்.
அதை முடித்துக் கொண்டு, ஸ்ரீபெரும்புதூர் பஜாரில் அவர் திறந்த வேனில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
பிறகு, படப்பை, வாலாஜாபாத்தில் பிரச்சாரம் செய்துவிட்டு, முத்தியால்பேட்டைக்கு வருகிறார்.
முத்தியால்பேட்டை வழியாக வரும் தமிழக முதல்வருக்கு காஞ்சீபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் ஆள்உயர மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கவுள்ளார்.
அங்குள்ள பிரசன்ன ஆஞ்சநேயரை முதல்வர் வணங்குகிறார்.
பிறகு பேரறிஞர் அண்ணா நினைவு இடத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி செல்கிறார். அங்கு அவரை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வரவேற்கிறார். பிறகு அங்கு அண்ணா பயன்படுத்திய பொருட்கள் மற்றும் அரிய புகைப்படங்களையும் முதல்வர் பார்வையிடுகிறார்.
பிறகு ஒலிநாடாவில் உள்ள அண்ணாவின் பேச்சையும் கேட்கிறார்.
பிறகு அண்ணா நினைவு இல்லத்தை சுற்றிப் பார்த்துவிட்டு, காஞ்சீபுரம் காந்திரோடு தேரடிக்கு வருகிறார். தேரடியில் ஆஞ்சநேயர் கோவில் அருகே திறந்த வேனில், தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
பிறகு அங்கிருந்து ஜி.ஆர்.டி.நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார்.
அங்கு விவசாயிகள், நெசவாளர்களின் குறைகளை கனிவுடன் முதல்வர் கேட்கிறார்.
பிறகு அங்கிருந்து புறப்பட்டு ஓரிக்கை வழியாக உத்திரமேரூர் செல்கிறார்.
இதற்கான அனைத்து ஏற்பாடு களையும், காஞ்சீபுரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் செய்துள்ளார்.
வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகே முதல்வர் வருகையையொட்டி, பிரம்மாண்டமான நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் வாலாஜாபாத் வழி நெடுகிலும், கொடி தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாடுகளை கழக அமைப்பு செயலாளரும், காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன் செய்துள்ளார்.
