செய்யாறு அருகே அதிமுக கொடியேற்றி நலத்திட்ட உதவிகள்  தூசி கே.மோகன் எம்எல்ஏ  வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட பெருங்கட்டூர்,  பெருமாந்தாங்கள்,  கொடையம்பாக்கம், காகனூர் உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெம்பாக்கம் ஒன்றிய குழு பெருந்தலைவர் டி ராஜி தலைமையில் நடைபெற்றது

இந் நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் கலந்து கொண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அதிமுக கொடியை ஏற்றி வைத்து ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் 18 அதிமுக கிளைக் கழகங்களுக்கு தலா 5000 வீதம் தனது சொந்த  நிதியிலிருந்து தூசி கே மோகன் எம்எல்ஏ வழங்கினார்.

செய்யாறு வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.மகேந்திரன் அனக்காவூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சி.துரை, மாவட்ட துணை செயலாளர் திருப்பனங்காடு டி.பி.துரை, செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் குமரேசன்,மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் கன்னியப்பன், மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் ரமேஷ்,மாவட்ட இளைஞரணி செயலாளர் சுரேஷ் நாராயணன்,உள்ளிட்டோர்