சென்னை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் ஜனவரி 9ம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னிர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; வரும் 9-ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் அறிவித்துள்ளனர். அதிமுக அமைப்பு செயலாளர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்திற்க்கு உறுப்பினர்களுக்கு தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது

கூட்டத்தில் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழுடன் வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். சசிகலா விடுதலை மற்றும் தேர்தலுக்கு முன்னர் நடக்க கூடிய அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.