செய்யாறு அருகே முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் அமைச்சர் சேவூர் எஸ் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பல்லி மற்றும் மேலப்பட்டு கிராமத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது
வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே மோகன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து பேசிய அமைச்சர் சேவூர் எஸ் ராமச்சந்திரன்: .
தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்து மாணவர்களின் கனவை நனவாக்கியவர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் மேலும் பொங்கல் திருநாளன்று ஏழை எளிய மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்று ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார் என்று பேசினார் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகத்தை அமைச்சர் சேவூர் எஸ் ராமச்சந்திரன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் செய்யாறு சுகாதார மாவட்ட துணை இயக்குனர் அஜிதா கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி பன்னீர்செல்வம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார், மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் ரமேஷ்,செய்யாறு வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம் மகேந்திரன் செய்யாறு தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அரங்கநாதன் அனக்காவூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சி துரை, மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் கன்னியப்பன் கூட்டுறவு சங்க தலைவர்கள் செபாஸ்டின் துரை, அனக்காவூர் சேகர் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .