செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த 5 மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மாவட்டத்தில் முதலிடமும் பிடித்த மாணவி பி.யமுனா நீட்தேர்வில் 344 மதிப்பெண் பெற்று மருத்துவ
த்தில் 7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டினால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்துள்ளனர் இதேப்பள்ளியில் 2017 -ல் தேர்ச்சி பெற்ற மாணவி ஆர்.சுஜீதா நீட் தேர்வில் 302 மதிப்பெண் பெற்று செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்துள்ளனர்.அதேப் போல் மாணவி எம்.பவித்ரா நீட் தேர்வில் 166 மதிப்பெண்கள் பெற்று கற்பக விநாயக மருத்துவக் கல்லூரியிலும் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்துள்ளனர். மேலும் இப்பள்ளியில் படித்த எஸ்.சுவாதி நீட் தேர்வில் 132 மதிப்பெண்ணும், எஸ்.விஜயலட்சுமி நீட் தேர்வில் 115 மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கலாந்தாய்வுக்காக காத்திருக்கின்றனர். ஒரே அரசு பள்ளியில் படித்த மூன்று மாணவிகள் ஒரே நேரத்தில் எம்.பி.பி.எஸ் சீட்டு கிடைத்திருப்பது இதுவே முதன் முறை என்பதால் சமூக வளைத்தளங்களில் இந்த மாணவிகளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. எம்.பி.பி.எஸ் சீட்டு கிடைத்த மாணவிகளான பி.யமுனா. ஆர்.சுஜீதா, எம்.பவித்ரா ஆகியோரை செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ.தூசி.கே.மோகன், செய்யாறு கல்வி மாவட்ட அலுவலர் நடராஜன் வாழ்த்தியோடு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு சந்தனமாலை மற்றும் சால்வை அணிவித்து இனிப்பு ஊட்டி பாராட்டினர். நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியர் எம்.உமாமகேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் எம்.அரங்கநாதன், கே.வெங்கடேசன், எம்.மகேந்திரன், ஏ.ஜனார்த்தனன், பழனிகுமார், தணிகாசலம், சுரேஷ், பிரகாஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
செய்திகள் | NEW CHENNAI EXPRESS
செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த 5 மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி…
