செங்கல்பட்டு: தமிழகத்தில், மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு நடப்பாண்டு  7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் மொத்தம் உள்ள 100 மருத்துவ இடங்களுக்கான இந்த ஆண்டு  கலந்தாய்வு மற்றும் மாணவர்   சேர்க்கை நேற்று  நடைபெற்றது. இதில், அரசு பள்ளியில் பயின்ற 6 மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டின் மூலம்   செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரியில்  இடம் கிடைத்தது. இதற்கான ஆணையை செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி  முதல்வர் .இரா.சாந்திமலர் அம்மாணவர்களுக்கு வழங்கினார்.

இந் நிகழ்ச்சியில், கல்லூரி துணை முதல்வர் அனிதா உள்பட பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். காஞ்சிபுரம்:  சமூக – பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் வைத்து வகைப்படுத்த முடியாது என்பதால், அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவுசெய்தது.அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 24 மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க இடம் கிடைத்துள்ளது.