தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தோம் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் தலைமையில் இன்று தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை இந்திய யூனியன் முஸ்லீம் லீகின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் சந்தித்து, 75-வது நிறுவன ஆண்டு தினமான 2023 மார்ச் 10-ந் தேதி சென்னையில் நடக்க இருக்கிற முஸ்லீம் லீக் பவளவிழா நிகழ்ச்சியில் பல்சமய சான்றோர் பெருமக்களுக்கு சமய நல்லிணக்க விருதுகள் வழங்கி வாழ்த்துரை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்

அனைத்து தகவல்களையும் மிகுந்த கவனத்துடன் கேட்டுக் கொண்ட  முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலிப்பதாக உறுதி அளித்தார்.

உடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு  தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முனைவர் வே இறையன்பு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவரும், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவருமான அப்துல் ரஹ்மான்
கே நவாஸ்கனி எம்பி
மாநில துணைத் தலைவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்டோர்