மதுரை: ஜெயபாரத் அன்னை பாரத் கிளாட்வே சிட்டி ஆகிய தனியார் கட்டுமான நிறுவனங்களில்
வருமான வரித்துறை சோதனை!
இந் நிறுவனங்களில் பல கோடி ரூபாய்க்கு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வருமானவரித்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
நேற்று சென்னையில் இருந்து 50 க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் மதுரை சென்று சோதனை ஈடுபட்டனர்.
மதுரையில் உள்ள வருமானவரித்துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்புடன் அவனியாபுரம், வில்லாபுரம், திருப்பாலை, திருப்புவனம் ஆகிய இடங்களில் உள்ள அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும், உரிமையாளர்களின் வீடுகளிலும் சோதனை மேற்கொண்டனர்.
இந் நிலையில், அவனியாபுரத்தில் உள்ள ஜெயபாரத் மற்றும் கிளாட்வே சிட்டி புரோமோட்டர் வீடு மற்றும் அலுவலகங்களில் இரண்டாவது நாளாக இன்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று இருபதிற்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், இன்று சுமார் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
