வந்தவாசி: உலக செவிலியர் தினம்!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி

புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள சுகாதார நிலையத்தில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.

வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,

சமூக சேவகர்கள் மலர் சாதிக் ,கேப்டன் பிரபாகரன்  செவிலியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.

வழக்கறிஞர் சா.இரா. மணி செவிலியர் தினம் குறித்து சிறப்புரையாற்றினார் .

செவிலியர்கள் ஸ்டெல்லா, கமலா இருவரும் சிறப்பிக்கப்பட்டனர். மருத்துவ ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது .

அலுவலக ஊழியர் மணிகண்டன் நன்றி தெரிவித்தார்.