திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு என்ன ஆயிற்று!


வந்தவாசி:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது துணைவியார் ஆகியோர் தங்களது ஜனநாயக ரீதியான கடமைகளில் ஒன்றான வாக்குரிமையை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் செலுத்துகையில் அங்கு பணியிலிருந்த அலுவலர்கள் யாரும் எழுந்து நிற்கவில்லை
அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் வரை தங்களது கடமையை செவ்வனே ஆற்றவேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம்
முதல்வர் வருகிறார் எழுந்து நில்லுங்கள் என யாரும் நிர்ப்பந்திக்க வில்லை
கனிமொழி எம்பி வாக்களிக்கும் போதும் அலுவலர்கள் முதல்வரின் தங்கை வருகிறார் என எழுந்திருக்க வில்லை யாரும் அவர்களை நிர்ப்பந்திக்கவில்லை அலுவலர்கள் தங்களது கடமையை செவ்வனே செய்தனர்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான முருகேஷ் அந்த பகுதியில் வாக்கு பதிவை பார்வையிட வருகிறார் அலுவலர்கள் அனைவரும் எழுந்து நிற்க்கின்றனர்
மாவட்ட ஆட்சியர் அலுவலர்களிடம் யாரும் எழுந்து நிற்காதீர்கள் உங்களது கடமையை சரிவர செய்யுங்கள் என கூறியிருக்கலாம்
“சரிதான் எல்லா கலெக்டர்களும் கந்தசாமி போல மக்களுக்கான கலெக்டராக இருக்க முடியுமா போப்பா உன் வேலைய பாருப்பா” என சொல்வது எனக்கு கேட்கிறது
அரசு அலுவலர்கள் மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் பார்வையிடும் போது எழுந்து நிற்க வேண்டும் என சட்டம் இருக்கின்றதா என தெரியவில்லை
