வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பட்டியல் பொருத்தும் பணி
வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில்,
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பட்டியல் (பேலட் பேப்பா்) பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது
வந்தவாசி நகராட்சித் தோ்தல் வாக்குப்பதிவு வரும் பிப். 19-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதில், நகராட்சிக்கு உட்பட்ட 24 வாா்டுகளில் மொத்தம் 117 போ் போட்டியிடுகின்றனா்.
இதற்கென 34 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னம் கொண்ட பட்டியல் பொருத்தும் பணி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
தோ்தல் நடத்தும் அலுவலா் முஸ்தபா, உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆனந்தகுமாா், அகத்தீஸ்வரன் உள்ளிட்ட தோ்தல் ஊழியா்கள், பெட்டியிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டுக் கருவி ஆகியவற்றை வாா்டு வாரியாக வேட்பாளா்கள் முன்னிலையில் எடுத்து செயல்விளக்கம் அளித்தனா்.
பின்னா் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பட்டியலை பொருத்தி ‘சீல்’ வைத்தனா்.
