லட்சத்தீவில் வெள்ளிக்கிழமை விடுமுறை தினம் மாற்றம் :


தமிழ்நாடு முஸ்லிம் லீக் கடும் கண்டனம்
மாநில தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கை:
கேரளா மாநிலத்திற்கு அருகே அரபிக் கடலில் அமைந்துள்ள அழகான தீவு லட்சத்தீவு. அமைதியான, அழகான இந்தத் தீவில் பெரும்பாலும் மலையாளிகள் அதற்கு அடுத்தப்படியாக தமிழர்களும் வசித்து வருகின்றனர்.
பழங்குடி பூர்வகுடிகள் நிறைந்த லட்சத்தீவில் 97 சதவீதம் இஸ்லாமியர்கள்தான்
இந்தத் தீவுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளே நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென பிரபுல் கோடா படேல் என்ற பாஜக பிரமுகரை இந்த தீவின் நிர்வாகியாக நியமித்தது மத்திய பாஜக அரசு.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த படேல், முன்னாள் அமைச்சராகவும் இருந்துள்ளார்.
படேல் நியமிக்கப்பட்ட நாள் முதலே லட்சத்தீவில் பெரும் பிரச்சினைகள் வெடிக்க தொடங்கின.
கட்டுப்பாடுகள் என்ற பெயரில் படேல் செய்த குளறுபடி காரணமாக கொரோனா பாதிப்பே இல்லாத நிலையில், படேல் செய்த குளறுபடி காரணமாக கொரோனா வைரஸ்க்கு ஏராளமனோர் பாதிக்கப்பட்டு, அதில் 20 க்கும் மேற்பட்டோர் பலியாகவும் சம்பவத்திற்கும் படேலே முழுகாரணம் என பலராலும் பேசப்படுகிறது
நிலம் கையகப்படுத்துதல், குண்டர் தடுப்புச் சட்டம். மது பானங்களின் வாசனையே இல்லாமல் இருந்த லட்சத்தீவில் மது பான விற்பனைக்கு படேல் அனுமதி அளித்தது.
அதை தொடர்ந்து லட்சத்தீவில் மாட்டிறைச்சிக்குத் தடை விதித்தார். இப்படி அடுத்தடுத்து இவர் எடுத்த நடவடிக்கையால் லட்சத்தீவு மக்கள் கடும் அதிருப்திக்குள்ளானார்கள்.
போராட்டங்களும் வெடித்தன. டிவிட்டரிலும் லட்சத்தீவை பாதுகாப்போம் என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது.
இந்த நிலையில் அடுத்த சர்ச்சையாக அங்கு வார விடுமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
முஸ்லீம்களுக்கு வெள்ளிக்கிழமை புனித நாள் என்பதால் வெள்ளி, சனி அங்கு வார விடுமுறையாக இருந்து வந்தது.
ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகும். ஆனால் அதை தற்போது ஞாயிறு என்று மாற்றி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக லட்சத்தீவு கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், அனைத்து ஞாயிறுகளும் இனி அரசு விடுமுறையாகும். அனைத்து வெள்ளிக்கிழமைகளும் வேலை நாளாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
படேல் போன்ற மதவாத அதிகாரிகளால் அமைதி தீவான லட்சத்தீவு கலவர பூமியாக மாறும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
இத்தனை ஆண்டுகளாக லட்சத்தீவில் கடைபிடிக்கப்பட்டு வந்த விதிமுறைகளை எல்லாம் மாற்றி, முரண்பாடுகளின் மொத்த உருவமாக படேல் மாறியுள்ளது. அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது
இனியும் படேல் லட்சத்தீவு நிர்வாகிக்கும் அதிகாரியாக இருந்தால், லட்சத்தீவை மயான தீவாக மாற்றிவிடுவார், ஆகவே படேலை மத்திய அரசு திரும்ப பெற வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதோடு, லட்சத்தீவில் மீண்டும் பழைய நடைமுறைகளே அமுல்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
