செய்யாறில் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவு தினம்! அன்னதானம் வழங்கப்பட்டது

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறு நகரில் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவு நாள் நிகழ்வு வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் அவர்களின் அறிவுறுத்தலின்படி அனுஷ்டிக்கப்பட்டது

செய்யாறு வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் முன்னிலையில்,   மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின்  5 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது அவரது திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்

பின்னர் அங்கு குழுமியிருந்த பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்யாறு வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.மகேந்திரன் செய்திருந்தார்

உடன் முன்னாள் ஒன்றிய கழக  செயலாளர் எஸ். கிருஷ்ணன், செய்யாறு தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அரங்கநாதன்,நகர கழக செயலாளர் ஜனார்த்தனம் நகர அம்மா பேரவை செயலாளர் வெங்கடேஷன் செபாஸ்டின்துரை, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.