வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கியதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
தற்போது சென்னை- புதுச்சேரி இடையே கரையை கடப்பதால் வட கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு நிற எச்சரிக்கை நீக்கப்பட்டு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் ஒரு சில இடங்களில் மட்டுமே மழைபெய்ய வாய்ப்புள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்தற்போது சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடப்பதால் கடலோர மாவட்டங்களில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது.
வடதமிழகத்தின் மேல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது.
புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுவைக்கும் சென்னைக்கும் இடையே கரையை கடந்தது.
முன்னதாக வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்தித்தார்அப்போது பேசிய அவர்,
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புதுவைக்கும் சென்னைக்கும் இடையே கரையை கடக்கும் என தெரிவித்தார்.
அப்போது 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் கடற்கரை பகுதிகளில் காற்று வீசும் என்றும் கூறினார்.
தென் மேற்கு வங்கக் கடல், வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
மேலும், சென்னை, திருவள்ளூரில் சிவப்பு எச்சரிக்கை திரும்ப பெறப்படுவதாகவும், ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
