ரெட் கிராஸ் சார்பில் மாணவர்களுக்கான டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி

அடுத்த சளுக்கை கிராமத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் வந்தவாசி வட்ட கிளை சார்பாக மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன் தலைமை வகித்தார்.
ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.ஏ. தேவராஜ், ரெட் கிராஸ் சங்க துணைத் தலைவர் இரா. சரவணன், செயலாளர் பா. சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக, வழூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். ஆனந்தன் பங்கேற்று, டெங்கு காய்ச்சல் எவ்வாறு ஏற்படுகிறது என்பது பற்றிய தகவல்களை மாணவர்களுக்கு பகிர்ந்தார்.
மேலும் இந்த நிகழ்வில் ரெட் கிராஸ் பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர் சீ. கேசவராஜ், உறுப்பினர் மலர் சாதிக், சுகாதார அலுவலர்கள் ராஜேஷ், முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு முகக் கவசங்கள், சோப்புகள், விழிப்புணர்வு பதாகைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மாதிரி பட விளக்கம் மாணவர்களுக்கு காட்டப்பட்டது. மேலும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இறுதியில் ஊராட்சி செயலாளர் எம்.பி. வெங்கடேசன் நன்றி கூறினார்.
