தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை நாளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி சந்தித்து பேச உள்ளார்.

சென்னை:

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோரது வீடுகளில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்ட நிலையில் நேற்று அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். இச்சம்பவத்திற்கு அதிமுக தலைமை கழகம் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை நாளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி சந்தித்து பேச உள்ளார்.

இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைகள் குறித்தும், லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தி வரும் சோதனைகள் குறித்தும் முறையிட எடப்பாடி கே பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.