ஆயுதபூஜை – விஜயதசமி நன்னாளில் எல்லா வளமும் பெற வாழ்த்துகின்றேன்
தமிழ்நாடு முஸ்லிம் லீக் மாநில தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:
மக்களால் 9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையின், முதல் 3 நாட்கள் தீமையை அழிக்கும் சக்தி வடிவமான துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்கள் செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியையும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் மக்கள் பக்தியுடன் வழிபடுவார்கள்.
நவராத்திரி விழாவின் ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜையையும், பத்தாவது நாளில் விஜயதசமியையும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும் தொழிற்கருவிகளையும், இயந்திரங்களையும் தூய்மைபடுத்தி சந்தனம், குங்குமமிட்டு வழிபடும் நன்னாள் ஆயுத பூஜை திருநாளாக இந்து சகோதரர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
நவராத்திரி பண்டிகையின் பத்தாவது நாளான விஜயதசமியன்று துவங்கிடும் நற்காரியங்கள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் மக்கள் அன்னை மகா சக்தியை வணங்கி கல்வி, கல்வி, தொழில் போன்றவற்றை தொடங்கி வெற்றித் திருநாளான விஜயதசமியை கொண்டாடுவார்கள்.
இத்தகைய சிறப்பு மிக்க ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி திருநாளில், மக்கள் அனைவரும் வாழ்வில் வெற்றிகள் பெற்று, எல்லா நலங்களையும், வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரிதாக்கி கொள்கிறேன்.
