பெட்ரோல், டீசல் ,கேஸ், விலை உயர்வை கண்டித்தும், பொது சொத்துக்களை தனியார் மையமாக ஆக்குவதை கண்டித்தும், வேளாண் சட்டங்களே திரும்பப் பெறக் கோரியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து  இன்று காலை  வந்தவாசி கே. எஸ். கே. நகர் உமர் பள்ளிவாசல் அருகில் மாபெரும் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் ஹாஜி. டி.எம். பீர்முகமது   தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்
மாநில துணை  செயலாளர் கே. ஏ. டபிள்யூ. அப்துல் காதர் ஷரீப்,  முன்னிலை வகித்தார்.

மாவட்ட  துணை செயலாளர் அப்துல் வாகித்
நகர செயலாளர் ஜாகிர் உசேன், ஒன்றிய செயலாளர்   ஏ.ஆர். ஜாகிர் உசேன், ஏ. அப்துல் ரஹீம், பெரிய பள்ளிவாசல் துணை இமாம்  அயாஸ், கரீம், மாவட்ட, நகர நிர்வாகிகள்  பலரும் கலந்து கொண்டனர்.

செய்யாறு நகரில்…

பெட்ரோல், டீசல் ,கேஸ், விலை உயர்வை கண்டித்தும், பொது சொத்துக்களை தனியார் மையமாக ஆக்குவதை கண்டித்தும், வேளாண் சட்டங்களே திரும்பப் பெறக் கோரியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து இன்று காலை  செய்யார்  மஸ்ஜிதே ரஹமதியா  பள்ளிவாசல் அருகில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் ஹாஜி. எஸ். பி .சையது உசேன் அவர்கள் தலைமையில்,

செய்யார் நகரத் தலைவர் எஸ். பி. ஹனிப் பாஷா முன்னிலையில் கருப்பு கொடி ஏந்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

நகர செயலாளர் செய்து உஸ்மான், மாவட்ட துணை செயலாளர் சௌகத் அலி , மாவட்ட துணை செயலாளர் எஸ். டி. பாபு, நகர துணைத்தலைவர் ஜே. அலீம் கான்,பாயில் பேக், அகமது பேக், எச். சலீம்பேக், மற்றும் மாவட்ட ,நகர, ஒன்றிய  நிர்வாகிகள்  உள்ளிட்டோர்

செய்தியாளர்: ஜே. மன்சூர்அலி வந்தவாசி