வந்தவாசி வட்டத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழை 83 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது

இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து வட்டாட்சியா் திருநாவுக்கரசு பேசுகையில்:
தடுப்பூசி செலுத்திக் கொள்ள கிராம மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். வியாபாரிகள், அரசு ஊழியா்கள் அவசியம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் வந்தவாசி காவல் துணைக் கண்காணிப்பாளர்  விஸ்வேஸ்வரய்யா, நகராட்சி ஆணையா் (பொறுப்பு) டி.உஷாராணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஏ.பி.வெங்கடேசன், எஸ்.ரவி, மருத்துவ அலுவலா்கள் சிவப்பிரியா, ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்