இந்தியாவில் கொரோனா பாதிப்பை விட குணமடைந்தோர் எண்ணிக்கை 3.22 கோடி பேர் அதிகரிப்பு

டெல்லி:
நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது.
ஒரே நாளில் புதிதாக 31,222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,22,24,937 பேராக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,92,864 பேராக குறைந்துள்ளது.
கடந்த 2019 இறுதியில் சீனாவில் கொரோனா பாதிப்பு முதலில் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலகின் அனைத்து நாடுகளும் கொரோனா பரவிய நிலையில், அதை முழுவதுமாக தடுத்து நிறுத்துவது என்பது கிட்டதட்ட முடியாத ஒன்றாக உள்ளது.
கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனாவின் பிடியில் உலக மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். கொரோனா முதல் அலையில் அதிகம் பாதிக்கப்படாமல் இந்தியா தப்பினாலும் இரண்டாவது அலையில் அதிகம் பாதிக்கப்பட்டது. தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்தது. தினசரியும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் காரணமாக படிப்படியாக கட்டுக்குள் வந்தது. கொரோனா மூன்றாவது அலை அக்டோபர் மாதத்தில் தீவிரமடையும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரமாக மீண்டும் அதிகரித்த நிலையில் தற்போது குறையத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவில் நேற்று 31,222 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,30,58,843 பேராக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 42,942 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,22,24,937 பேராக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 290 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் மரணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,41,042 பேராக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,92,864 பேராக குறைந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 15,26,056 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 53,31,89,348 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதனிடையே கடந்த மாதம் 27ஆம் தேதி, முதல்முறையாக நாடு முழுவதும் ஒரே நாளில் 1 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டது.
2-வது தடவையாக, கடந்த 31ஆம் தேதி, 1 கோடியே 28 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.
இந்த சூழலில் 3 வது முறையாக நேற்று 1 கோடி தடுப்பூசிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
மாலை 6 மணி நிலவரப்படி, 90 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு இருந்தது. இவற்றில், உத்தரபிரதேசம், பீகார் ஆகிய இரு மாநிலங்களில் மட்டும் 35 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. நாடு முழுவதும் மொத்தம் 69,90,62,776 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது புதிதாகக் கண்டறியப்பட்ட ‘மு’கொரோனா வகை குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை உச்சத்தில் இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பண்டிகைகளை மக்கள் தங்கள் வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.தமிழகத்தில் நேற்று கொரோனா வைரசால் 1,556 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,556 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,24,234 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 169 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழகத்தில் நேற்று மட்டும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,038 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நேற்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,564 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 25,72,942 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,55,088 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 4,32,72,865 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது கொரோனா வார்டில் 16,256 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
