மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் மருத்துவ உபகரணங்களை அரசு மருந்தகத்திற்கு ஒப்படைத்தார் புதுவை ஆளுநர்

புதுச்சேரி அரசு மருந்தகத்திற்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் கோரிமேட்டில் உள்ள மருந்தகத்தில் நடைபெற்றது

ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன் கலந்துகொண்டு மருத்துவ உபகரணங்களை சுகாதாரத்துறையிடம் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் அருண், இயக்குனர் ஸ்ரீராமுலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து புதுவை துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசுகையில்:

‘கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே தீர்வு. எனவே சுகாதாரத்துறையின் மூலமாக நாளை  வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் வருகிற 5-ந் தேதி காலை 8 மணி வரை தொடர்ந்து 48 மணி நேரம் தடுப்பூசி திருவிழாவை நடத்த வேண்டும். புதுவையில் தற்போது 65 சதவீதம் மக்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர்.

தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.