ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை புதுப்பித்ததன் மூலம் தியாகிகளை மத்திய அரசு அவமதிப்பு செய்துள்ளது – முன்னாள்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்பி

புதுடெல்லி:

ஜாலியன் வாலாபாக் பகுதியில் பல்வேறு புனரமைப்புப் பணிகளை மத்திய அரசு செய்துள்ளது. ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தின் புதுப்பிக்கப்பட்ட வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை
திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வின்போது நினைவுச்சின்னத்தில் உள்ள டிஜிட்டல் முறையிலான அருங்காட்சியகக் காட்சியகங்களையும் பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

தியாகிகளுக்கு அவமதிப்பு
ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை மத்திய அரசு சீரமைப்பது ‘தியாகிகளுக்கு அவமதிப்பு’ என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்பி கடுமையாக குற்றம்சாட்டி இருக்கிறார்.

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி எம்பி கூறியதாவது:-

“ஜாலியன் வாலாபாக் தியாகிகளுக்கு இதுபோன்ற அவமதிப்பு தியாகத்தின் அர்த்தம் தெரியாதவர்களால் மட்டுமே செய்ய முடியும்.

நான் ஒரு தியாகியின் மகன் .தியாகிகளின் அவமானத்தை எந்த வகையிலும் பொறுத்துக்கொள்ள மாட்டேன்.

இந்த அநாகரிக கொடுமைக்கு நாங்கள் எதிரானவர்கள்.

புரிந்துகொள்ள முடியாது
தியாகிகள் இந்த தேசத்துக்கு என்ன செய்தார்கள் என்பதை சுதந்திரத்துக்குப் போராடாதவர்களால் புரிந்துகொள்ள முடியாது” எனத் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் நினைவுச்சின்னத்தை சீரமைப்பதற்கு பல்வேறு தரப்பினரும் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது வரலாற்றை அழிக்கும் செயல் என்று அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

மறக்க முடியாத படுகொலை
இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் ஜாலியன் வாலாபாக் படுகொலை என்னும் துயரம் இந்திய மக்களின் மனதில் நீங்காத வடுவாக இருக்கிறது.

1919-ம் நாடு ஏப்ரல் 13-ம் தேதி ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுவதற்காக பஞ்சாபின் அமிர்தர்சஸில் ஜாலியன் வாலாபாக் என்ற மைதானத்தில் பெண்கள், குழந்தைகள் என்று ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடினார்கள்.

ஆங்கிலேயருக்கு எதிராக கோஷமிட்டார்கள் ஜெய்ஹிந்த் என முழக்கமிட்டனர்.

இரக்கமற்ற ஆங்கிலேய அதிகாரி
அப்போது இந்த மைதானத்தில் ஒரு வழி மட்டுமே இருந்த நிலையில் அதுவும் அடைக்கப்பட்டு, ஆங்கிலேய அதிகாரி மைக்கேல் ஓ டயர் உத்தரவின்பேரில் சுமார் 150-க்கும் மேற்பட்ட துருப்புகள் எந்தவித முன்னறிப்பும் இன்றி பொதுமக்களை நோக்கி கண்முடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.

வெளியேறும் வழி இல்லாததால் மைதானத்தின் உள்ளேயே சுற்றி, சுற்றி வந்த மக்கள் துப்பாக்கி குண்டுகளுக்கு பரிதாபமாக இரையானார்கள்.

பிரிட்டீஷ் அதிகாரிகள் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் 379 பேர் மட்டுமே சுடப்பட்டதாக கூறப்பட்டது.

நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அதன்பிறகு 21 ஆண்டுகள் கழித்து இரக்கமற்ற மைக்கேல் ஓ டயரை இந்திய சுதந்திர போராட்ட வீரர் உத்தம் சிங் கொன்று பழிதீர்த்தது குறிப்பிடத்தக்கது.