சென்னையில் கொரோனா பொதுமுடக்க விதிகளை மீறியது தொடா்பாக நேற்று 320 வாகனங்கள் பறிமுதல் முகக்கவசம்
அணியாத 423 போ் மீது வழக்குப் பதிவு
சென்னை மாநகரில் நேற்றைய தினம் மேற்கொண்ட வாகனத் தணிக்கை, கண்காணிப்பு சோதனையில் கொரோனா பொதுமுடக்க விதிகளை மீறிய 119 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றிய 310 பேரின் இருசக்கர வாகனங்கள், 9 ஆட்டோக்கள், 1 இலகுரக வாகனம் என மொத்தம் 320 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முகக்கவசம் அணியாமல் சென்றது தொடா்பாக 423 போ், தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதது தொடா்பாக 6 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
