வந்தவாசி நகரில் மாற்றுத் திறனாளிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகராட்சி மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் வந்தவாசி கிளை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பூசி முகாம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு வந்தவாசி நகராட்சி ஆணையர்(பொறுப்பு) டி. உஷாராணி தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் வரவேற்றார்.

வந்தவாசி ரெட் கிராஸ் சங்க துணைத் தலைவர் இரா. சரவணன், செயலாளர் பா. சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலர் ஜோதி லிங்கம் அவர்கள் பங்கேற்று, மாற்றுத் திறனாளிகளுக்கான அரசின் இலவச திட்டங்களை பற்றியும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினார்.

மேலும் வந்தவாசி ரெட் கிராஸ் சார்பில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு முகக் கவசங்கள், பிஸ்கட், சோப்புகள், பேனா, மதிய உணவு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. அவர்களுக்கான தடுப்பூசி முகாமும் நடந்தேறியது.

நிகழ்வில் ரெட் கிராஸ் சங்க பொறுப்பாளர்கள் சீ. கேசவராஜ், கு. சதானந்தன், மலர் சாதிக், வங்கை சு. அகிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு உறுதுணையாக அன்பால் அறம் செய்வோம் சேவைக் குழு நிர்வாகிகள் அசாருதீன், கதிர் பாட்சா மற்றும் கற்க கசடற குழு செயலாளர் மனோஜ் உள்ளிட்டோர் செயல்பட்டனர்.