முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது போடப்பட்டுள்ள வழக்குகள் என்ன? குற்றச்சாட்டுகள் என்ன, FIR என்னசொல்கிறது?

2014 முதல் அதிமுக ஆட்சி முடியும் வரை பல கோடி ரூபாய்க்கான அரசு கான்ட்ராக்டுகளும்,டெண்டர்களும் SP வேலுமணி, தனது அதிகாரத்தை பயன்படுத்தி, தான் சம்பந்தப்பட்ட நிறுவங்களுக்கு பல கோடி ரூபாய் லாபத்தை கொடுத்துள்ளார் என்ற குற்றச்சாட்டே முதன்மையானது.

முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட 7 நபர்கள், 10 நிறுவனங்கள் என மொத்தம் 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சார்பாக நேற்று முதல் தகவல் அறிக்கை (FIR) தாக்கல் செய்யப்பட்டது.

120பி, 420, 409 IPC, 109 உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலான பிரிவுகள் அரசாங்க பொறுப்பில் உள்ளோர் ஊழல் செய்தல், ஏமாற்றுதல், அதிகார துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கானவை.

மேலும் , 1991 முதல் 2001 ஆம் ஆண்டு வரை எஸ்.பி.வேலுமணி கோவை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட கான்ட்ராக்டராக இருந்துள்ளார்.

இந்நிலையில் 1999 ஆம் ஆண்டு ஓர் உறவினருடன் சேர்ந்து தனது சொந்த நிறுவனத்தை துவங்கி கோவை மாநகராட்சி டென்டர்களை வாங்கிவந்துள்ளார்.

2001 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அந்த நிறுவனத்தைவிட்டு வெளியேறுகிறார்,

ஆனால் அந்த நிறுவனத்தை தொடர்ந்து அவரது சகோதரர் அன்பரசன் நடத்தி வந்ததாக FIR கூறுகிறது.

2014 ஆம் ஆண்டில் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவியேற்றபின் , தனது அதிகாரத்தை பயன்படுத்தி,  அவர் மற்றும் அவரது உறவினர்கள் சார்ந்த நிறுவனங்களுக்கு பல டெண்டர்களை கொடுத்து வந்துள்ளார்.

462.02 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னை மாநகராட்சி டெண்டர், 346.81 கோடி ரூபாய்க்கான கோவை மாநகராட்சி பணிகளுக்கான அரசு டென்டர் என மொத்தமாக 810 கோடி ரூபாய்க்கான டெண்டர் எஸ்.பி.வேலுமணி உறவினர்களும் நண்பர்களும் நடத்தும் பல்வேறு நிறுவனங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கான்ட்ராக்டுகளை தான் சார்ந்த நிறுவனங்களுக்கு கொடுக்க, டெண்டர் மோசடியிலும் வேலுமணி ஈடுபட்டுள்ளார்.

FIR ல் குறிப்பிடப்பட்டுள்ள 10 நிறுவனங்களின் மொத்த லாபம் குறுகிய காலத்தில் பன்மடங்கு உயர்துள்ளதும் FIR ல் கூறப்பட்டுள்ளது.

அசுர வேக வளர்ச்சி – குறுகிய காலத்தில் எஸ்.பி. வேலுமணியை சார்ந்த நிறுவனங்களின் லாபம் பன்மடங்கு உயர்ந்துள்ளன.

இப்படி, 2014 முதல் அதிமுக ஆட்சி முடியும் வரை பல கோடி ரூபாய்க்கான அரசு கான்ட்ராக்டுகளும்,டென்டர்களும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, தான் சம்பந்தப்பட்ட நிறுவங்களுக்கு பல கோடி ரூபாய் லாபத்தை கொடுத்துள்ளார் என்ற குற்றச்சாட்டே முதன்மையானது.