திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தேரடியில் கொரோனா மூன்றாம் அலை குறித்த விழிப்புணா்வு பிரசாரம் 
நடைபெற்றது.
வந்தவாசி காவல் உட்கோட்டம், வந்தவாசி அன்பால் அறம் செய்வோம் பொது சேவைக் குழு சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, வந்தவாசி துணை காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா தலைமை வகித்து, பொதுமக்கள் தங்களை கொரோனா தொற்று ஏற்படாமல் தற்காத்துக் கொள்வது குறித்தும், கொரோனா மூன்றாம் அலை ஏற்படாமல் தடுப்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா்.
நிகழ்ச்சியில் வந்தவாசி தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் குமாா், அன்பால் அறம் செய்வோம் பொது சேவைக் குழு நிறுவனா் அசாருதீன், டாக்டா் கலாம் கனவு அறக்கட்டளை நிறுவனா் கேசவராஜ் மற்றும் சேவைக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
