வந்தவாசி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அனைத்து சமுதாய
மக்களுக்கான ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான் பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அனைத்து சமுதாய மக்களுக்கான ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா தடுப்பூசி முகாம் பெரிய பள்ளிவாசல் முத்தவல்லி அப்துல்காதர் ஷரீப் தலைமையில் நடைபெற்றது
ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் முகம்மது சிராஜுதீன் கிராஅத் ஒதினார்
பெரிய பள்ளிவாசல் பட்டேல்ஷா மீரா பெரிய பள்ளிவாசல் பொருளாளர் அப்துல்மஜீத் முன்னிலை வகித்தனர்
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணி வேந்தன் மாவட்ட அவைத் தலைவர் கே.ஆர்.சீதாபதி சட்டமன்ற உறுப்பினர்கள் மணப்பாறை அப்துல்சமத் வந்தவாசி அம்பேத்குமார் செய்யாறு ஜோதி உள்ளிட்டவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே. எஸ்.மஸ்தான் அனைத்து சமுதாய மக்களுக்கான ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தடுப்பூசி முகாமை துவக்கி வைத்து
சிறப்புரையாற்றினார்
நிகழ்ச்சியில் அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய சேர்மன் கமலாட்சி இளங்கோவன் நகர செயலாளர் ஜலால் முன்னாள் நகர செயலாளர் அன்சாரி ஒன்றிய செயலாளர்கள் நந்தகோபால் ராதா, பிரபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிர் அணியினர் என பலரும் கலந்து கொண்டனர்
