புதுச்சேரி முழுவதும் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டம் ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன் விருப்பம்

நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு புதுச்சேரி முழுவதும் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.

புதுச்சேரி,

புதுவை ஆளுநர் மாளிகையில் உயர்நிலை குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஆளுநர் டாக்டர்  தமிழிசை செளந்தர்ராஜன் தலைமை தாங்கி பேசியதாவது:-

நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு புதுச்சேரி முழுவதும் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.

அதன்படி மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதற்காக வேளாண் செயலர் தலைமையில் 75 பொறுப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

மரக்கன்றுகள் நடுவதற்கான இடங்கள் அல்லது பகுதிகள், மர வகைகள், எண்ணிக்கை ஆகியவற்றை திட்டமிட வேண்டும்.

புதுச்சேரியை பசுமை நகரமாக மாற்றும் ஒரு நல்ல முயற்சியாக அமையும். இதில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என்று அனைத்து தரப்பினரும் இணைந்து பசுமை புதுச்சேரியை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்