வந்தவாசி அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பாக இலவச கொரோனா தடுப்பூசிமுகாம் பிடிஜி  வளாகத்தில் நடைபெற்றது.

இதில் வழுர் வட்டார மருத்துவர் டாக்டர் ஆனந்தன் மற்றும் மருத்துவர் ரம்யா வந்தவாசி காவல் துணை கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா கலந்து கொண்டனர்.

வணிகர் சங்கத்தின் தலைவர்  இஷாக் செயலாளர்  ஆறுமுகம் பொருளாளர் சலீம் இந்த முகாமினை ஏற்பாடு செய்தனர். இதில் வணிகர் சங்கத்தின் நிர்வாகிகள் உடன் இருந்து முகாமினை சிறப்பாக நடத்தினார்கள்.

முகாமிற்கு  வந்தவர்களை முறையாக வழிநடத்தியது கற்க கசடற கல்வி சேவைகள் மற்றும் சமூக நல அமைப்பு

இதில் அமைப்பின் கௌரவத் தலைவர் மலர் சாதிக் மற்றும் நிறுவனர் டாக்டர் இரா பாஸ்கரன் ஆலோசகர்  கேப்டன் பிரபாகரன் கிருஷ்ணா கோச்சிங் சென்டர் முதல்வர் பா. சீனிவாசன் எக்ஸ்னோரா செயலாளர்
கு. ச ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.