செய்யாறு வடக்கு ஒன்றிய அதிமுகசார்பில்
இளைஞர்மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ் ராமச்சந்திரன் வழங்கினார்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் 2100 இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி பாசறை மாவட்ட செயலாளர் திருமூலன் (எ) பையாகுட்டி தலைமையில் நடைபெற்றது
சிறப்பு விருந்தினர்களாக இந்துசமய அறநிலையத் துறை முன்னாள் அமைச்சரும் ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ் இராமச்சந்திரன் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே மோகன் கலந்து கொண்டு 2100 பாசறை உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி பேசினார்கள் .
மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் முன்னாள் எம்எல்ஏ கலசபாக்கம் வி பன்னீர்செல்வம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் .
செய்யாறு ஒன்றிய கழக செயலாளர்கள் சி துரை அருக்காவூர் அரங்கநாதன் குணசீலன் மு எம்எல்ஏ ஆரணி நகர கழக செயலாளர் அசோக்குமார் ஆவின் சேர்மன் பாரிபாபு வழக்கறிஞர் சங்கர் வந்தவாசி நகர கழக செயலாளர் ஓட்டல் பாஷா ஒன்றிய கழக செயலாளர்கள் எம்கேஏ லோகேஷ்வரன் தெள்ளார் டிவி பச்சையப்பன் பெரணமல்லூர் ஜி செல்வராஜ் நகர கழக செயலாளர் மூர்த்தி மற்றும் எம்ஜிஆர் இளைஞரணி ராஜேஷ் கண்ணா செய்யாறு அருணகிரி ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர் .
இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யாறு வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம் மகேந்திரன் செய்திருந்தார் .

