பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இந்தியர்களுக்கு எதிராகவே பெகாசஸ் உளவு செயலியை பயன்படுத்தியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் அடுத்த மாதம் 13 ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், செல்போன் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து, இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமித்ஷா விலக வேண்டும்
இந்நிலையில், செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஒட்டுக்கேட்பு விவகாரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்.
எனது செல்போனையும் பெகாஸஸ் மால்வேர் மூலம் உளவு பார்த்துள்ளனர் என்றும், ரஃபேல் தொடர்பான விசாரணையை தடுக்க பெகாஸஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்த வேண்டியதை, இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தியுள்ளனர்.
பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இந்தியர்களுக்கு எதிராகவே பெகாசஸ் உளவு மால்வேரை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
