திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அனக்காவூர் கிழக்கு மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் கூழமந்தல் பேசும்பெருமாள் கோயில் அருகே இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி பாசறை மாவட்ட செயலாளர் திருமூலன் தலைமையில் நடைபெற்றது

ஒன்றிய கழக செயலாளர்கள் சி துரை குணசீலன் முன்னாள் எம்எல்ஏ முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே மோகன் முன்னாள் எம்எல்ஏ கலந்து கொண்டு  3000 உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி பேசினார்

உடன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர்ரெட்டியார்
மாவட்ட துணை செயலாளர் டிபி துரை  செய்யாறு ஒன்றிய கழக செயலாளர் எம் மகேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்