திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி காவல் துறை சாா்பில், கொரோனா விழிப்புணா்வுப் பிரசாரம்
வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
இதில், வந்தவாசி காவல் துணை கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா தலைமை வகித்துப் பேசியதாவது:
“கொரோனா முதல் மற்றும் 2-ஆவது அலையின் காரணமாக, நாம் பெரும் பாதிப்புகளை சந்தித்தோம். எனவே, 3-ஆவது அலையை தவிா்க்க விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும்.
வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக் கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் “என்றாா்
நிகழ்ச்சியில் வந்தவாசி தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் குமாா், உதவி ஆய்வாளா்கள் மஞ்சுநாதன், சேகா் மற்றும் போலீஸாா் பங்கேற்றனா்.
