தமிழ்நாட்டில் நேற்று 3,211 பேருக்கு
கொரோனா தொற்று உறுதி .
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1 லட்சத்து 53 ஆயிரத்து 575 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 1,813 ஆண்கள், 1,398 பெண்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 211 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதில் அதிகபட்சமாக கோவையில் 366 பேரும், ஈரோட்டில் 251 பேரும், சேலத்தில் 205 பேரும், சென்னையில் 189 பேரும், திருப்பூரில் 185 பேரும், தஞ்சாவூரில் 190 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 10 பேருக்கும், பெரம்பலூரில் 17 பேருக்கும் உட்பட 29 மாவட்டங்களில் 100-க்கும் குறைவாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 32 லட்சத்து 43 ஆயிரத்து 351 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அதில் 14 லட்சத்து 66 ஆயிரத்து 914 ஆண்களும், 10 லட்சத்து 43 ஆயிரத்து 107 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் உட்பட 25 லட்சத்து 10 ஆயிரத்து 59 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 44 பேரும், தனியார் மருத்துவமனையில் 13 பேரும் என 57 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 33 ஆயிரத்து 253 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து 3,565 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர்.
இதுவரையில் 24 லட்சத்து 43 ஆயிரத்து 141 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 33 ஆயிரத்து 665 பேர் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
