திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் அட்டை வழங்குதல் ஆகியவை குறித்து மாவட்ட கழக செயலாளர் தூசி கே மோகன் மு எம்எல்ஏ தலைமையில் கூட்டம் ஆரணி நகரில்  நடைபெற்றது

முன்னாள் அமைச்சரும் ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ் இராமச்சந்திரன் கலசபாக்கம் வி பன்னீர்செல்வம் மு எம்எல்ஏ முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்

மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர்  டாக்டர் பரமசிவம் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

தெற்கு மாவட்ட கழக செயலாளரும் போளூர் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமான ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்

மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருமூலன் (எ) பையாகுட்டி அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் பி ஜாகீர் உசேன் மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் உள்ளிட்ட கழக‌ நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.