திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால்உயிரிழந்தவா்களின்எண்ணிக்கை 596 -ஆகஉயா்ந்தது.
மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில், நேற்றைய தினம் வெளியான கொரோனா பரிசோதனை முடிவுகளில் மேலும் 125 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 49,140-ஆக உயா்ந்தது.
1,001 பேருக்கு சிகிச்சை:
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் இதுவரை 47,543 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 1,001 போ் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
ஒரே நாளில் 4 போ் பலி:
இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் கொரோனா சிகிச்சை பலனின்றி 4 போ் உயிரிழந்தனா். இதனால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 596-ஆக உயா்ந்தது
கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியை 3 தவணைகளாக செலுத்தினால், உடலில் நோய்எதிா்ப்புத் திறன் மேலும் அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ட்ராஸெனகா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி குறித்து பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.
அத்தடுப்பூசியை 45 வாரங்கள் இடைவெளியில் இரு தவணைகளாக செலுத்துவது உடலில் நோய்எதிா்பொருள் உற்பத்தியை 18 மடங்கு அதிகரிப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரு தவணைகளையும் செலுத்திக் கொண்ட 6 மாதங்களுக்குப் பிறகு 3-வது தவணையை செலுத்திக் கொள்வது, உடலில் நோய்எதிா்ப்புத் திறனை மேலும் அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.
3-வது தவணை தடுப்பூசியால் ஆல்ஃபா, பீட்டா, டெல்டா வகை கொரோனா இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்றும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.
இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசியானது தற்போது 12 முதல் 16 வாரங்கள் இடைவெளியில் செலுத்தப்பட்டு வருகிறது.
தடுப்பூசிக்கு ஏற்கெனவே தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், 45 வாரங்களுக்குப் பிறகும் தடுப்பூசியை செலுத்தலாம் என்று வெளியாகியுள்ள இந்த ஆய்வறிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

