திருவல்லிக்கேணி நடுக்குப்பத்தில் உள்ள குடிசை வீட்டை பார்வையிட்ட எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், மாற்று இடத்திற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

தந்தை எவ்வழியோ தனயனும் அவ்வழியே என்பதற்கேற்ப முதல்வராக பதவியேற்ற நாள் முதல் பொதுமக்களை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பது, தொகுதி மக்களை சந்திப்பது, கோரிக்கை மனுக்களை பெறுவது, திடீரென ரேஷன் கடைகளுக்கு விசிட் அடிப்பது என முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு புறம் கலக்கி வருகிறார்.
அது போல் மகனும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினும் தனது தொகுதிக்கு தினந்தோறும் விசிட் அடிக்கிறார். அங்கு பொதுமக்களின் குறைகளை கேட்டறிகிறார்.
எம்எல்ஏவாக பதவியேற்றவுடன் நேராக தனது தொகுதிக்கு சென்ற அவர் அங்குள்ள குடிசை வாழ் மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது அந்த பகுதியில் நீண்ட நாட்களாக அள்ளப்படாமல் இருந்த குப்பை மேடு இருந்ததை மக்கள் கூறினர். இதையடுத்து உடனே குப்பையை அள்ளுமாறு தூய்மை பணியாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.
நீண்ட நாட்களாக பாழடைந்து துர்நாற்றம் வீசி வந்த ஒரு பொது கழிப்பறைக்குள் கொஞ்சமும் முகம் சுளிக்காமல் உள்ளே சென்று ஆய்வு செய்தார்.
தனது தொகுதி ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்கிறார்
குடிசை பகுதிக்குள் ஒரு வீட்டிற்குள் குனிந்து வளைந்து சென்ற உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நிலையறிந்து மாற்று இடம் தருவதாக உறுதியளித்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்:
திருவல்லிக்கேணி பகுதி, நடுக்குப்பம், 8-வது தெருவைச் சேர்ந்த குமார்-செல்வி தம்பதியின் வீட்டுக்கு சென்றோம். அவர்களுடைய மகள் ஏசுமதி தன் வீட்டுச்சூழலையும், தந்தை குமாரின் உடல்நிலையையும் பற்றி எடுத்துக்கூறினார். அவர்களுடைய பிரச்சினை தீர்ப்பதாக உறுதியளித்துள்ளேன் என்றார்.
பந்தா இல்லாத உதயநிதி ஸ்டாலின்
நடிகர், படத்தயாரிப்பாளர் எம்எல்ஏ என்ற பந்தா ஏதும் இன்றி மக்களோடு மக்களாக கலந்து குடிசை வீடுகளுக்கு சென்று மக்களிடம் குறை கேட்கின்றார் தனது தாத்தா தந்தை போல் அரசியல் அனுபவம் இல்லை என்றாலும் ஏழை எளிய மக்களின் குறைகளை கேட்பதில் தன்னிகரற்று விளங்குகிறார்
தொகுதி முழுவதும் சுற்றி வந்து மக்களின் குறைகளை நிவர்த்தி செய்கிறார் இவரது இந்த செய்கைகளால் குடிசை வாழ் மக்கள் மிகுந்த சந்தோஷம் அடைகின்றனர் ட்விட்டரில் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு குவிகிறது.
