

ஜூன் 21 உலக யோகா தினத்தை முன்னிட்டு வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் வாட்ஸ் அப் குழு மூலம் வட்ட, மாவட்ட, மாநில அளவில் யோகா முறைகள் செய்து காட்டிய ஒன்பதாம் வகுப்பு மாணவன் எம். ஷேக் இமாம் க்கு பாராட்டுச் சான்றிதழ், விருது மற்றும் பரிசுகள் சமூக இடைவெளியுடன் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்விற்கு ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை வகித்தார்.
ரோட்டரி கிளப் உறுப்பினர் எஸ்.எஸ். சுரேஷ் முன்னிலை வகித்தார்.
“சிறப்பு அழைப்பாளராக” நம்பேடு ஊ.ஒ.ந.நி.பள்ளி ஆசிரியர் புலவர் மா. ரகுபதி அவர்கள் பங்கேற்று, இன்றைய கொரோனா நிலையில் யோகா முறைகள் கடைபிடிப்பது முக்கிய ஒன்றாகும். யோகாசனம், தியானம் செய்வதால் மனதில் ஒரு வித தூய்மையான எண்ணங்கள் வெளிப்படும் என்றும் பேசினார்.
மேலும் இந்த நிகழ்வில் ‘உடல்நலமும் மனநலமும்’ என்ற தலைப்பில் 2 ஆம் வகுப்பு மாணவன் செ. அரிபிரபு குமார் ஆசன முறைகள் பற்றி விளக்கினார்.
இறுதியில் ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் அ. ஷாகுல் அமீது நன்றி கூறினார்.
