சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால
தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து அரசியல் ரீதியாக ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி:
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அரசு முறை பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
அதன்பின்னர் தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பிரதமர் நரேந்திர மோடியிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
இதையடுத்து டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து சால்வை அணிவித்து புத்தகத்தை அன்பளிப்பாக அளித்தார்
பின்னர் சோனியா ராகுலுடன் அரசியல் ரீதியாக ஆலோசனை நடத்தினார்.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடன் சந்திப்பு மேற்கொண்ட பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட்டார்
தமிழக நலனுக்காக திமுகவுடன் காங்கிரஸ் இணைந்து செயல்படும் என ராகுல் காந்தி எம்பி டுவிட்டரில் பதிவு செய்தார்
