தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மதுக்கடைகள் நிரந்தரமாக மூடப்படவேண்டும் என தமிழக பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்வார்கள் என அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார்.

அதன்படி பாஜகவினர் இன்று அவரவர் வீடுகளின் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னையில் உள்ள பாஜக தலைமையகமாக கமலாலயத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று வலியுறுத்தியும், டாஸ்மாக் கடைகளை திறக்கும் அரசின் முடிவை கண்டித்தும் முழக்கம் எழுப்பினர். பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.