சிறுவர், மாணவர்களை ஆபாச பாதைக்கு அழைத்து செல்லும் மதன் 18 ப்ளஸ் யூடிப் சேனலை தடை செய்க

தமிழ்நாடு முஸ்லிம் லீக் 
நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கை :

இந்தியாவில் இருத்து பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டாலும் ப்ரி பயர் (Free fire) போன்ற வேறு பெயர்களில் இன்னும் அத்தகைய விளையாட்டுகள் இணையத்தில் உலாவந்து கொண்டு இருக்கின்றது.

பப்ஜி விளையாட்டு எப்படி விளையாடினால் வெற்றி பெறுவது என்பது பற்றி ட்ரீக்ஸ் சொல்லி தரும் சேனலாக தொடங்கப்பட்டது தான் மதன் என்கின்ற யூடிப் சேனல்.
பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், சிறுவர்கள் பப்ஜி விளையாட்டில் அதிக அளவு ஆர்வம் காட்டியதால் இந்த மதன் ட்ரீக்ஸ் சேனல் சிறுவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் போக போக ஆபாச பேச்சும் பெண்களை இழிவு படுத்தும் பேச்சுகளும் இந்த சேனலில் அதிகரிக்க தொடங்கியுள்ளன .

ஆபாச பேச்சுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்ததால் ஆபாச பேச்சுக்காகவே மதன் 18 ப்ளஸ் என்ற மற்றொரு சேனலும் தொடங்கியுள்ளனர்

இந்த யூடியுப் சானல் நடத்தும் நபர் ஒரு கட்டத்தில் தமிழ் திரைபடங்களில் வரும் சைபர்க்ரைம் ஹீரோவாக தன்னை நினைத்துக்கொண்டு முகத்தை காட்டாமல் இருப்பது தற்பெருமை பேசுவது, எதார்த்த பேச்சு என்று பெண்களை இழிவாக ஆபாசமாக பேசுவது , போன்றவற்றை தொடங்கியுள்ளார்.

மதன் யூடிப் சேனலுக்கு 7 லட்சமும் இவர்களின் மற்றொரு 18+ சேனலுக்கு ஒன்பது லட்சம் பேரும் சந்தாதாரர்களாக உள்ளனர்.

இவர்களின் பெரும்பாலானோர் சிறுவர்களே.
இந்த யூடியுப் சேனல் மதன் என்ற இன்ஸ்டா பக்கத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது.

மதன் இந்த ஆன்லைன் கேமில் விளையாட வருகின்றார் என்று இந்த இன்ஸ்டா பக்கத்தில் பதியப்படுகின்றது.

உடனே ஏராளமான சிறுவர்கள் மதனின் ஆபாச பேச்சை கேட்க விளையாட்டில் இணைகின்றனர்.

சிறுவர்கள் விளையாடிக்கொண்டு இருக்கும் போதே சேனல் வருமானத்தில் ஒரு குறுப்பிட்ட தொகை ஆதரவற்றவர்களுக்காக நன்கொடை செய்கிறோம் என்று சொல்லப்படுகின்றது.

அத்துடன் உதவி செய்ய விரும்புவோர் உடனே தங்கள் கூகுல் பே அக்கவுண்ட் மூலமாக பணத்தை செலுத்தலாம் என்று திரையில் பணம் செலுத்த வேண்டிய எண்ணும் காட்டப்படுகிறது

பார்வையாளர்களில் பலர் பணத்தை அனுப்பி வைக்கின்றனர்.

யூடியுப் சேனலில் இருந்து பெறப்படும் தொகைக்கு முறையான கணக்கோ, தொண்டு நிறுவனத்திற்காக பணம் வசூல் செய்ய அங்கிகாரம் பெற்றதற்கான ஆவணம் எதும் காட்டப்படுவதில்லை.

ஆகையால் மதன் யூடிப் பக்கத்தின் முழுக்க முழுக்க மாணவர்கள் மற்றும் சிறுவர்களை மட்டும் குறிவைத்து மூளைசலவை செய்து மோசடி செயலில் ஈடுபட்டு வருகிறது.

இப்படி சிறுவர்களையும், மாணவர்களையும் ஆபாச பாதைக்கு கொண்டு செல்லும் மதன் 18 ப்ளஸ் யூடிப் சேனலை தமிழக அரசு தடை செய்வதோடு, இந்த யூடிப் சேனல் நடத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.