பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் அனைத்து வழிப்பாட்டு தலங்களையும் திறக்க வேண்டும் 

அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள்

நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கை :

தமிழகம் முழுவதும் அதிகரித்து வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கடந்த மே மாதம் 10ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், பலர் ஊரடங்கில் தேவையின்றி சுற்றியதால் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் மே 24ஆம் தேதி முதல் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஜூன் 7ஆம் தேதி வரை நடைமுறையில் இருந்தது.

பின்னர் பொதுமக்களின் நலன் கருதி ஜூன் 7ஆம் தேதிக்கு பின் பல்வேறு தளர்வுகள் தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் அதே நேரத்தில் உயிரிழப்புகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

கடந்த மாதம் 36 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 15 ஆயிரமாக குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே சில தளர்வுகள் கடந்த ஊரடங்கு நீட்டிப்பு இப்போது அறிவிக்கப்பட்டது.

அதில், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு என்பது அதே நிலையில் உள்ள போதிலும், எஞ்சியுள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 14-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது குறித்தும் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார், இந்த ஆலோசனை கூட்டத்தில், ஊரடங்கை மேலும் 1 வாரம் நீட்டிக்க அதிகாரிகள் பரிந்துரை செய்ததாக கூறப்படுகின்றது.

அதன்படி, ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு தினங்களில் தமிழக அரசின் சார்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏப்ரல் 26-ம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளது.

மே 10-ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியிருப்பதால், மிகுந்த மனஉளைச்சலுக்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.

தற்போது தமிழகத்தில் கொரோன தொற்றின் பாதிப்பு சென்னை உள்பட 27 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் குறைந்து வரும் நிலையில், ஜூன் 14-ம் தேதி முதல் ஊரடங்கு முடிவடைந்து, மேலும் 1 வாரம் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் பாதிப்பு குறைவாக பதிவாகும் மாவட்டங்களில் சில தளர்வுகளை அறிவிக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஆகவே குறைவாக பாதிப்பு பதிவாகும் சென்னை உள்பட 27 மாவட்டங்களில் அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீ்க் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து,பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதால் நிம்மதியாக உள்ள தாய்மார்கள், டாஸ்மாக் திறக்கப்படவுள்ளதாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவலால் தாய்மார்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

ஆகவே, தமிழக தாய்மார்களின் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் கடைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் மூடுவிழா நடத்த வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.